பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூர் மற்றும் காத்மாண்டு இடையே நேரடி விமானச் சேவை குறித்து...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாள்தோறும் நேரடி விமானங்களை இயக்கவுள்ளது.

இந்தப் புதிய விமானத்தின் பயணச்சீட்டுகள் அந்நிறுவனத்தின் மற்றும் பல முன்னணி இணையதளங்களின் மூலம் முன்பதிவுச் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்பிரஸ் லைட்டின் பயணச்சீட்டின் விலை ரூ.8,000 மற்றும் எக்ஸ்பிரஸ் வால்யூவின் விலை ரூ.8,500 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் புதிய விமானப் பாதையின் மூலம், அமிர்தசரஸ், தில்லி, கோவா, ஹைதரபாத், ஜம்மு, கோழிக்கோடு, திருச்சி உள்ளிட்ட 20 இந்திய நகரங்களிலிருந்து பெங்களூரு வழியாக காத்மாண்டுவுக்குச் செல்ல முடியும்.

இத்துடன், இந்த விமானப் பாதையின் மூலம் பெங்களூரு வழியாக ஒரு நிறுத்த பயணங்களில், அபுதாபி, சௌதி அரேபியாவின் தம்மாம் போன்ற சர்வதேச நகரங்களிலிருந்தும் காத்மாண்டுவுக்குச் செல்ல முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரிலிருந்து 31 நகரங்களுக்கு 450 வாராநிதிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 2,710 ஆக உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com