ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக கைது செய்யப்பட்ட இன்ஸ்டா பிரபலம் குறித்து...
Kolkata police arrested Sharmishtha Panoli. (pic from X, Sharmishtha Panoli.)
கைதான ஷர்மிஸ்தா பனோலி.படம்: எக்ஸ் / ஷர்மிஸ்தா பனோலி.
Published on
Updated on
1 min read

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலத்தை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இந்தப்பெண் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் பாலிவுட் நடிகர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மௌனமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த விடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பவே அதை நீக்கியும் இருக்கிறார். பின்னர், பலரும் இவரை கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவதுக்குப் பிறகு ஷர்மிஷ்தா பனோலி, “யாரையும் காயப்படுத்தும் எண்ணத்துடன் நான் இதைக் கூறவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், எனது பதிவுகளில் கவனமாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

பிரச்னை முடிந்துவிட்டதென இருந்த நிலையில், ஏற்கனவே அவர்மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நோட்டீஸை காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்ப முயற்சித்துள்ளார்கள். ஆனால், அவர் அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதாக பெயர் குறிப்பிடாத காவல்துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர், நீதிமன்ற உத்தவிரவின்படி ஷர்மிஸ்தா பனோலியை கொல்கத்தா காவல்துறையினர் வெள்ளிக் கிழமை (மே.30) குருகிராமில் வைத்து கைது செய்தனர்.

பஹல்காமில் ஏப்.22இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே.7ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷ் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுத்தது.

பின்னர், அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com