நிலச்சரிவு: அருணாசலில் 7 பேர் பலி

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஏழு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Seven killed in Arunachal landslide
நிலச்சரிவில் சிக்கிய வாகனம்.
Published on
Updated on
1 min read

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஏழு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பனா–செப்பா சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர். பலியானவர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள கப்பல் விபத்து: 22 தமிழக கடலோர கிராமங்கள் பாதிப்பு!

இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு மீட்புக் குழுவினரால் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கிய இரண்டாவது பயணிகள் வாகனமும் மயிரிழையில் தப்பியது.

நிலச்சரிவில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அருணாச்சலப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மாமா நட்டுங் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com