

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் 400 புட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கல்யாண் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற நபரை வழிமறித்து காவல் துறை அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிசோதித்ததில், 400 இருமல் மருந்துப் புட்டிகள் இருந்ததைக் கண்டறிந்தனர். அவற்றைச் சோதனையிட்டதில் அவையனைத்தும் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற 33 வயதான முகமது மதாப் அனிஸ் ரைஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவருக்கு தடை செய்யப்பட்ட இருமல் மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பதை பஜார்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.