உலக பேரிடர்களில் முதலில் ஆதரவுக்கரம் நீட்டுவது இந்தியா: பிரதமர் மோடி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.14,260 கோடி திட்டங்களை தொடங்கிய பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி -
Updated on
1 min read

உலகளாவிய பேரிடர்களில் முதலில் ஆதரவுக்கரம் நீட்டுவது இந்தியா தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலைகள், தொழில், சுகாதாரம் உள்பட முக்கிய துறைகளில் ரூ.14,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அதன்பின்னர் நவராய்பூர் அடல் நகரில் உள்ள சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டத்தையும், வாஜ்பாயின் சிலையையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

திறந்துவைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது,

எந்தவொரு உலகளாவிய நெருக்கடியிலும் தீர்வு காண்பதில் இந்தியா முன் நிற்கிறது. உலகில் எந்த மூளையில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்தியா உதவிகள் வழங்குவதில் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது. மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மாந்திரம்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நான் விருந்தினராக இங்கே வரவில்லை, உங்களில் ஒருவனாக இருக்கிறேன்.

சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதேபோன்று ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களும் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பல மாநிலங்களும் தங்கள் நிறுவன தினத்தைக் கொண்டாடுகின்றன. மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தற்போது சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் வன்முறையிலிருந்து விடுபடுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 25 ஆண்டுகளில், சத்தீஸ்கர் மாநிலம் நக்சல் வன்முறை, பின்தங்கிய நிலைக்குப் பெயர் பெற்றதிலிருந்து செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக உருவெடுக்கும் வரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கண்டுள்ளது.

சத்தீஸ்கர் மக்களின் கடின உழைப்பும், அடுத்தடுத்த பாஜக அரசுகளின் தொலைநோக்குத் தலைமையும் இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று அவர் பாராட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

Summary

Prime Minister Modi has said that India is the first to extend a helping hand in global disasters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com