

மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராய்ப்பூரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும் சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் கலந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குழந்தைகளிடம் ஆர்வத்துடன் பேசும் புகைப்படங்களும், விடியோக்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலைகள், தொழில், சுகாதாரம் உள்பட முக்கிய துறைகளில் ரூ.14,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் நவராய்பூர் அடல் நகரில் உள்ள சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டத்தையும், வாஜ்பாயின் சிலையையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
அதோடு, சத்தீஸ்கரின் அடல் நகரில் உள்ள ராய்ப்பூரில் உள்ள 'சாந்தி ஷிகார்' பிரம்மா குமாரிகள் தியான மையத்தையும் பிரதமர் திறந்துவைத்தார். சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொண்டார்.
Prime Minister Narendra Modi interacted with around 2,500 children undergoing treatment for heart disease in Raipur as part of the Man ki bath programme.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.