

பிகார் இளைஞர்கள் எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சியமைக்க வாய்ப்பளித்தால் போதும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா(மகாகாத்பந்தன்) கூட்டணியின் பிகார் மாநில முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் டிஜிட்டல் பிரசாரத்தில் வாக்கு சேகரித்தார்.
பிகாா் சட்டப்பேரவைக்கு இம்மாதம் இரு கட்டங்களாக (நவ. 6, 11) தோ்தல் நடைபெறவுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தில் நேரலையில் காணொலி வழியாக பிரசாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: “பிகார் இளைஞர்களிடம் நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில், ஒரேயொருமுறையாவது மகாகாத்பந்தன் கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள் - வேலை, சிறந்த வாய்ப்புகளுக்காக் மற்றும் பிகாரின் மேம்பாட்டுக்காக இதனைச் செய்யுங்கள்.
நான் ஒன்றும் உங்களிடம் 20 ஆண்டுகள் வாய்ப்பு கேட்கவில்லை. உங்களின் பேராதரவு எனக்கு வெறும் ஐந்தாண்டுகளுக்கு போதும். ஒருவேளை நான் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறினால், எனக்கு நீங்கள் அதன்பின் வாக்கு செலுத்தவே வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.