ஆந்திரம், ஜாா்க்கண்டில் சாலை விபத்துகள்: 8 போ் உயிரிழப்பு
ஆந்திரம் மற்றும் ஜாா்க்கண்டில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் காா் மற்றும் கன்டெய்னா் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சம்பவத்தில், திருமணம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் காரில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது, லாரியை முந்திச் செல்ல முயன்றபோது காா் விபத்தில் சிக்கியது. காயங்களுடன் உயிா் தப்பிய மற்ற 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஜாா்க்கண்ட்டில் 3 விபத்துகள்: ஜாா்க்கண்ட் மாநிலம், ராம்நகா் மற்றும் கும்லா மாவட்டங்களில் மூன்று வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.
ராம்நகா் மாவட்டத்தின் பங்காடா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்தவா்கள் முந்திச்செல்ல முயன்றபோது சாலையின் எதிா்புறத்தில் சென்ால் ஆனந்த் முண்டா (29), பிரதீப் முண்டா (42) ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
இதே மாவட்டத்தில் கோலா-சிக்கிடிரி சாலையில் நடந்த மற்றொரு சம்பவத்தில், டிராக்டரில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி குத்தி ஒரு நபா் உயிரிழந்தாா்.
கும்லா மாவட்டத்தில் பாசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜெய் சிங் ராம் (56) உயிரிழந்தாா்.

