

பிகார் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியதாக எழுந்த புகாரில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லலன் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.
பிகார் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று(நவ. 4) மாலை ஓய்ந்தது. பிகாரில் 121 தொகுதிகளுக்கு நவ. 6-இல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பிகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் துலாா் சந்த் யாதவைக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ள ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) வேட்பாளர் ஆனந்த் சிங்குக்கு ஆதரவாக பிகாரின் மொகாமாவில் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் நடந்துகொள்ள தங்கள் கூட்டணிக் கட்சித் தொண்டர்களை தூண்டிவிட்டதாக லலன் சிங் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து தோ்தல் நடத்தை விதிகள் மீறல் உள்ளிட்ட புகார்களில் லலன் சிங் மீது முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டிருப்பதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொகாமா தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சாா்பாக ஆனந்த் சிங் களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட பிரியதா்சி பியூஷை ஆதரித்து கடந்த வியாழக்கிழமை மொகாமா பகுதியில் துலாா் சந்த் யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஆனந்த் சிங் ஆதரவாளா்களுக்கும், துலாா் சந்த் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.
துலாா் சந்த் யாதவ் கொலை வழக்கில் ஆனந்த் சிங், மணிகாந்த் தாக்கூா் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் தோ்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.