

பாட்னா: பிகார் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று(நவ. 4) மாலை ஓய்ந்தது. பிகாரில் 121 தொகுதிகளுக்கு நவ. 6-இல் நடைபெறுகிறது.
இத்தொகுதிகளில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய தலைவர்களின் பிரசாரத்துடன் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
பிகாரில் முதல்முறை தேர்தலைச் சந்திக்கும் அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வருகையால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனினும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகாத்பந்தன் கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி உள்ளது. அவ்விரு தரப்பும் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கவும் தவறவில்லை.
ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளா் துலாா் சந்த் யாதவ் என்பவா் கொல்லப்பட்ட சம்பவம் பிகாரில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்தத் துயரம் ஜன் சுராஜ் கட்சிக்கு பெரியளவில் ஆதரவலையாக திரும்புமா? என்ற கேள்விக்குறியும் எழுகிறது.
பிகாரில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை? என்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எழுப்பிய கேள்வியும் வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
பிகாரில், முந்தைய லாலு பிரசாத் ஆட்சியைக் காட்டாட்சி காலம் என்று பிரதமர் மோடி, அமித் ஷா உள்பட என்டிஏ கூட்டணித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்திருப்பதும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மீன் பிடித்து வாக்கு சேகரித்ததும் சுவாரசியத்தின் உச்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.