எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி...
CM Mamata leads TMC rally in Kolkata against SIR
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி பேரணிX
Published on
Updated on
1 min read

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.

பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போதே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தற்போது, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேற்குவங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று(நவ. 4) பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இந்திரா காந்தி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் மாளிகை வரை 3.8 கிமீ தூரம் பேரணி நடைபெறுகிறது.

மமதாவின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி இதில் கலந்துகொண்டுள்ளார்.

'கண்ணுக்குத் தெரியாத அமைதியான மோசடி இது' என்று வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மமதா விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

Summary

CM Mamata leads TMC rally in Kolkata against SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com