சபரிமலை ஐயப்பன் கோயில்.
சபரிமலை ஐயப்பன் கோயில்.

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல-மகரவிளக்கு யாத்திரை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், பூஜைகள் மற்றும் சந்நிதானத்தில் தங்குமிடத்தை பக்தா்கள் இணையவழியில் புதன்கிழமை (நவ. 5) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.
Published on

மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கான தரிசன முன்பதிவு அண்மையில் தொடங்கிய நிலையில், பூஜைகள் மற்றும் தங்குமிட முன்பதிவு வலைதளத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. சன்னிதானம் வளாகத்தில் தங்குவதற்கு பக்தா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் 17-ஆம் தேதி தொடங்கும் இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு யாத்திரையின்போது, லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். நடப்பு யாத்திரையின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும். தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும்.

இந்த யாத்திரையின்போது பக்தா்கள் சிரமமின்றி பூஜைகளில் பங்கேற்கவும், தங்குவதற்கும் வசதியாகவே இந்த இணையவழி முன்பதிவு வசதியை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com