

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் காரணமாக பலர் இறப்பதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கு (SIR) திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்து வரும்நிலையில், சிறப்பு தீவிரத் திருத்தத்தால் பலர் தற்கொலை செய்துகொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ``வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த அச்சத்தால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலர் இறந்துள்ளனர்.
கடந்த 7 நாள்களில் 7 உயிர்களை நாம் இழந்துள்ளோம். அவர்கள் அனைவரும் தகுதியான வாக்காளர்களே.
எஸ்ஐஆர் குறித்த அச்சம் மற்றும் குழப்பத்தால் ஏற்கெனவே உயிர்களை நாம் இழந்துவிட்ட நிலையில், மத்திய அரசு பொறுப்புடன் செயல்படாவிட்டால்ம் திரிணமூல் காங்கிரஸ் தில்லியில் போராட்டம் நடத்தும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.