இந்திய ஜென் ஸி இளைஞர்களுக்கு அகிம்சை வழியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘எச் பைல்ஸ்’ என்ற பெயரில் சான்றுகளை வெளியிட்டு, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து பாஜக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது இந்திய இளைஞர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி,
“இந்திய ஜென் ஸி இளைஞர்கள் வாக்குத் திருட்டை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. எனவே நீங்கள் கேட்பதும் கவனிப்பதும் முக்கியம்.
நான் தேர்தல் ஆணையத்தையும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையையும் கேள்விக்குள்ளாக்குகிறேன். எனவே 100 சதவீத ஆதாரத்துடன் பேசுகிறேன்.
இந்தியாவின் ஜென் ஸி மற்றும் இளைஞர்களுக்கு உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் உள்ளது” என்றார்.
மேலும், போலி வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தனிச் செயலி வைத்துள்ளது. அவர்களை நீக்கினால், நியாயமான தேர்தல் நடைபெறும் என்பதால் தேர்தல் ஆணையம் அதனைச் செய்யவில்லை. நியாயமான தேர்தலை ஆணையம் விரும்பவில்லை” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.