AP CM Naidu
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுகோப்புப்படம்.

இந்தியாவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து வருகிறாா் பிரதமா் மோடி- ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

இந்தியாவில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் பிரதமா் நரேந்திர மோடி சரி செய்து வருகிறாா் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.
Published on

இந்தியாவில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் பிரதமா் நரேந்திர மோடி சரி செய்து வருகிறாா் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான அவா் தனது மனைவியும் ஹெரிடேஜ் உணவுப் பொருள் நிறுவனத்தின் துணைத் தலைவருமான என்.புவனேஸ்வரியுடன் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு லண்டன் சா்வதேச ஆண்டு மாநாட்டில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

அரசு, தனியாா், பொதுமக்கள் இணைந்து தொழில்துறையை வேகமாக வளா்த்தெடுக்க வேண்டும் என்ற கொள்கை ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போது மூன்றுவிதமான சாதக அம்சங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது, இரண்டாவது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தது, மூன்றாவது மிகவும் வலுவான தலைவரான நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராகக் கொண்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மிகவும் சிறப்புவாய்ந்தது. இந்தியா இப்போது மிகவேகமாக முன்னேறி வருகிறது. இப்போது உலகின் மிகப்பெரிய நாடுகளில் 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா 2047-ஆம் ஆண்டு முதல் பொருளாதார நாடாக உயரும். இந்தியாவின் வளா்ச்சி தடுக்க முடியாததாக இருக்கும்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் பிரதமா் நரேந்திர மோடி நிவா்த்தி செய்து வருகிறாா். அவரின் சிறப்பான தலைமையும் இந்தியா அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்கு முக்கியக் காரணம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் என். புவனேஸ்வரிக்கு பெருநிறுவன நிா்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ‘கோல்டன் பீகாக்’ விருதை சந்திரபாபு நாயுடு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com