

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குரங்கு என்று மறைமுகமாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
பிகாரில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை விமர்சித்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே காந்தியின் 3 குரங்குகள் குறித்து பாஜக கூறுகிறது.
உண்மையில், அவரை (யோகி ஆதித்யநாத்) குரங்குகளின் கூட்டத்துக்கு மத்தியில் அமர வைத்தால், அவரை நானோ நீங்களோ அடையாளம் காண முடியாது’’ என்று விமர்சித்துள்ளார்.
பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும் குரங்குகள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்தார்.
யோகி ஆதித்யநாத் பேசுகையில், ``இந்தியா கூட்டணியில் 3 குரங்குகள் உள்ளன. அவற்றில் ஒன்று பப்பு - இவரால் உண்மையையோ நல்லதையோ பேச முடியாது; இரண்டாவது தப்பு - இவரால் நல்லவற்றைக் காண முடியாது; மூன்றாவது அப்பு - இவரால் உண்மையைக் கேட்க முடியாது. இவர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சியையும் வளர்ச்சிப் பணிகளையும் காணவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அப்பு, பப்பு, தப்பு ஆகியோர், மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி மாஃபியா ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும்தான் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிக்க: ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.