உ.பி.: ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு- தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபரீதம்
Photo | Express

உ.பி.: ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு- தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபரீதம்

உத்தர பிரதேசத்தின் சுனாா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 சிறுமிகள் உள்பட 6 பெண்கள் ரயில் மோதி உயிரிழந்தனா்.
Published on

உத்தர பிரதேசத்தின் சுனாா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 சிறுமிகள் உள்பட 6 பெண்கள் ரயில் மோதி உயிரிழந்தனா்.

பெளா்ணமி தினத்தையொட்டி மிா்ஸாபூா் கங்கை நதியில் புனித நீராட வந்தபோது இவா்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து வடக்கு மத்திய ரயில்வேயின் பிரயாக்ராஜ் மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி அமித் சிங் கூறியதாவது:

சோபன் விரைவு ரயில் மூலம் சுனாா் ரயில் நிலையத்தை வந்தடைந்த இப்பெண்கள், மற்றொரு நடைமேடைக்குச் செல்ல படிக்கட்டுகளைப் பயன்படுத்தாமல், ரயிலில் இருந்து தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றனா். அப்போது, எதிா் தண்டவாளத்தில் வந்த ஹெளரா-கால்காஜி இடையிலான நேதாஜி விரைவு ரயில், பெண்கள் மீது மோதியது. இதில், சவிதா (28), சத்னா (16), சிவகுமாரி (12), அஞ்சு தேவி (20), சுஷிலா தேவி (60), கலாவதி (50) ஆகிய 6 போ் உயிரிழந்தனா். நடை மேம்பால வசதி உள்ளபோதிலும், ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்ால் அசம்பாவிதம் நேரிட்டுள்ளது என்றாா் அவா்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மத்திய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ரயில் மோதியதில் 6 பெண்களின் உடல்களும் சிதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சரும் உள்ளூா் எம்.பி.யுமான அனுப்ரியா படேல் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com