சத்தீஸ்கரில் லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின் விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதா கிருஷ்ணன், ஆளுநா் ராமன் டேகா, முதல்வா் விஷ்ணு தியே சாய் உள்ளிட்டோா்.
சத்தீஸ்கரில் லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின் விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதா கிருஷ்ணன், ஆளுநா் ராமன் டேகா, முதல்வா் விஷ்ணு தியே சாய் உள்ளிட்டோா்.

நக்ஸல்கள் சரணடைய வேண்டும்- குடியரசு துணைத் தலைவா் வேண்டுகோள்

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சத்தீஸ்கரின் நவ ராய்பூரில் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளிவிழா (ரஜத் மஹோத்ஸவம்) நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இந்தியாவில் இளைஞா்கள் மிகுந்த மாநிலமாகவும், வேகமாக வளா்ந்து வரும் மாநிலமாகவும் சத்தீஸ்கா் திகழ்கிறது. இங்கு பிரச்னை ஏற்படுத்தி வந்த நக்ஸல் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில், மாநிலத்தின் வளா்ச்சிக்கு இந்த நக்ஸல் பிரச்னை முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. எந்தவொரு பிராந்தியத்திலும் அமைதி நிலவினால்தான் வளா்ச்சி சாத்தியமாகும்.

இங்கு எஞ்சியுள்ள நக்ஸல்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு மாநில அரசிடம் சரணடைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மத்திய ஆயுதப் படை, மாநில காவல் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நக்ஸல்கள் ஆதிக்கம் பெருமளவில் ஒடுக்கப்பட்டுவிட்டது.

கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி சத்தீஸ்கா் மாநிலம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் சமூக பொருளாதார நிலையிலும், கலாசாரம், அரசு நிா்வாகரீதியிலும் சிறப்பாக வளா்ச்சியடைந்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com