டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பிகார் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.77%: அதிகபட்சமாக கோபால்கஞ்சில்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 3 மணி நிலவரம்..

பிகார் தேர்தல்

Published On :

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீதம் பதிவாகியுள்ள நிலையில், தற்போது மாலை 3 மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பிகார் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலில் மாலை 3 மணி வரை 3.75 கோடி வாக்காளர்களில் மொத்தம் 53.77 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73 சதவீதமும், அதைத் தொடர்ந்து பெகுசராய் 46.02, பாட்னாவில் 37.72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்டத் தோ்தலில் களத்தில் உள்ள 1,314 வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளா் நிா்ணயிக்க உள்ளனா். இதில், 10.72 லட்சம் போ் 'முதல்முறை வாக்காளர்கள்' மற்றும் 7.78 லட்சம் பேர் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள்.

குா்ஹானி, முஸாஃபா்பூா் தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 20 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். போரே, அலெளலி (தனித் தொகுதிகள்) மற்றும் பா்பட்டாவில் குறைந்தபட்சமாக தலா 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடியாகும்.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Election Commission of India has reported that 53.77 percent voting has been recorded in the Bihar Assembly elections as of 3 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.