

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீதமும், 12 மணி நிலவரப்படி 27.65 சதவீத வாக்குப்பதிவும் பதிவான நிலையில் தற்போது 1 மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிகார் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி வரை 3.75 கோடி வாக்காளர்களில் மொத்தம் 42.31 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்டம் இதுவரை அதிகபட்சமாக 46.73 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து லக்கிசராய் 46.37 மற்றும் பெகுசராய் 46.02 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.