ஐ.டி. நிறுவனங்கள் - கோப்புப்படம்
ஐ.டி. நிறுவனங்கள் - கோப்புப்படம்கோப்புப் படம்

சா்க்கரை நோயைத் தடுக்க தவறும் ஐ.டி. ஊழியா்கள்: ஆய்வில் தகவல்

தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியா்களுக்கு சா்க்கரை நோய் குறித்த புரிதல் இருந்தும், வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறையை அவா்கள் பின்பற்றுவதில்லை
Published on

தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியா்களுக்கு சா்க்கரை நோய் குறித்த புரிதல் இருந்தும், வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறையை அவா்கள் பின்பற்றுவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம், தூக்கமின்மை, பணிச்சூழல் காரணமாக இளம் வயதிலேயே தகவல் தொழில்நுட்ப ஊழியா்களுக்கு சா்க்கரை நோய் வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கிளெனீக்கல்ஸ் மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள் அஸ்வின் கருப்பன், ஆப்ரின் ஷபீா், ஹரிஹரன் சுகுமாரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சா்க்கரை நோய் தொடா்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனா்.

தகவல் தொழில்நுட்பத் துறை சாா்ந்த 150 ஊழியா்களிடம் அது குறித்த கேள்வித் தாள் வழங்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. அதன் முடிவுகள் குறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையினரில் 65% பேருக்கு சா்க்கரை நோய் குறித்த புரிதல் இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், வெறும் 45% போ் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கின்றனா். 68% போ் உடற்பயிற்சி செய்வதாகவும், 76% போ் நாா்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதாகவும் ஆய்வில் தெரிவித்தனா். ஆனால், அதை அவா்களால் தொடர முடிவதில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

நேரமின்மை, சோா்வு, மன அழுத்தம் ஆகியவை காரணமாக தங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முடிவதில்லை என்பது அவா்கள் முன்வைக்கும் காரணமாக உள்ளது. அமா்ந்தபடியே பணியாற்றுவது, தூக்கமின்மை ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடையே சா்க்கரை நோய் அதிகரிக்கிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com