

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.300 கோடி நில ஒப்பந்த முறைகேடு தொடர்பான தேசிய ஜனநாயக் கூட்டணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ``மகாராஷ்டிரத்தில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முத்திரைத் தீர்வையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இது ஒரு கொள்ளை மட்டுமல்ல; கொள்ளை தொடர்பான ஒப்புதலுக்கான சட்ட முத்திரைகூட.
வாக்குத் திருட்டால் அமைக்கப்பட்ட அரசின் நிலத் திருட்டாகும் இது. அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், மீண்டும் வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஜனநாயகம், பொதுமக்கள் மற்றும் தலித்துகளின் உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
மோடி அவர்களே, உங்கள் மௌனம்தான் நிறைய பேசுகிறது. தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்களின் உரிமைகளைப் பறிக்கும் கொள்ளையர்களால்தான் உங்கள் அரசு இயங்குவதால்தான், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.