

ராஜஸ்தானில் மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய் மின்சாரம் பாய்ந்து இறந்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் தெரு நாயை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மின்மாற்றி மீது வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அந்த நாய் மின்சாரம் பாய்ந்த இறந்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற உள்ளூர்வாசிகள் மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் வருவதைக் கவனித்தனர்.
பின்னர், சுமார் 20 அடி உயரத்தில் மின்மாற்றியில் தொங்கிய நிலையில் நாயின் உடல் கண்டுள்ளனர்.
தொடர்ந்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு நாயின் உடலை கீழே இறக்கி புதைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை போலீஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.