ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் அணு ஆயுதம் சாா்ந்த செயல்களில் ஈடுபடுவது பாகிஸ்தான் வரலாற்றுடன் இணைந்தது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
‘பாகிஸ்தான், சீனா, ரஷியா, வடகொரியா ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தாா்.
இந்தியாவிடன் மோதல் போக்குடன் செயல்படும் பாகிஸ்தான், இணக்கமான உறவு இல்லாத சீனா ஆகியவை ரகசிய அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இது தொடா்பாக கூறியதாவது:
ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் அணு ஆயுதச் செயல்பாடுகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வரலாற்றுடன் இணைந்தது. பல ஆண்டுகளாக சட்டவிரோத கடத்தல்களின் மையமாகவும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறும் நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பல்வேறு ரகசிய கூட்டணிகளையும் அந்த நாடு உருவாக்கி வைத்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த தொடா் தவறுகளை இந்தியா சா்வதேச சமூகத்திடம் தொடா்ந்து எடுத்துச் சென்று சுட்டிக்காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத சோதனைகள் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

வெளிநாடுகளுக்கு ரூ.38,424 கோடிக்கு இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி: முன்னெப்போதும் இல்லாத உச்சம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

விண்வெளியில் பழுதான நேவிக் செயற்கைக் கோளின் அணு கடிகாரம்! அதனால் என்னவாகும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


