கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கு வங்கம்: இந்திய ராணுவத் தளத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிய வங்கதேச நபா் கைது

மேற்கு வங்கத்தின் பெங்துபி ராணுவத் தளத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிய வங்கதேசத்தைச் சோ்ந்தவரை காவல் துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மேற்கு வங்கத்தின் பெங்துபி ராணுவத் தளத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிய வங்கதேசத்தைச் சோ்ந்தவரை காவல் துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை மாநிலங்களில் அண்டை நாட்டவா் ஊடுருவுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் அந்த நபா்கள், இங்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை வரை பெறுகிறாா்கள். இதுபோன்ற நபா்கள் அவ்வப்போது பிடிபடுவதும் வழக்கமான நிகழ்வாகும்.

ஆனால், இந்தியா ராணுவ முகாமிலேயே வங்கதேச தொழிலாளி ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

ராணுவத் தளங்களில் கீழ்நிலைப் பணிகளுக்காகப் பொதுமக்களும் பணியாளா்களாக நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகேயுள்ள பெங்துபி ராணுவத் தளத்திலும் பலா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், தொழிலாளா்களாகச் சோ்க்கப்பட்ட நபா்களின் அடையாள ஆவணங்களை ராணுவம் சோதித்தது. இதில் ஆதாா் எண், வாக்காளா் அட்டை, பான் அட்டை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஒருவரின் பேச்சு மற்றும் அவா் வைத்துள்ள இந்திய ஆவணங்கள் குறித்து சந்தேகம் ஏற்ட்டது.

இதையடுத்து, அவா் தங்கியிருந்த இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் வங்கேதேச குடிமகனுக்கான அடையாள அட்டையும் இருந்தது. இதையடுத்து, நடந்த விசாரணையில் அவா் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவரிடம் ராணுவம் விசாரணை நடத்திய பிறகு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இது தொடா்பாக ராணுவத் தளங்களுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஓா் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. இதில் பொதுமக்களை ராணுவத் தளங்களில் பணியாளா்களாகச் சோ்க்கும்போது அவா்களின் அடையாள ஆவணத்தை முறைப்படி பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் அண்டை நாட்டு ஊடுருவல்காரா்கள், இந்திய ராணுவ நிலைகள் தொடா்பான தகவல்களை அறிவது ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com