ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியாவுக்கு மீண்டும் நேரடி விமான சேவை: சீனா இன்று தொடங்குகிறது!

புது தில்லி-ஷாங்காய் இடையிலான பயணிகள் விமானத்தை சைனா ஈஸ்டா்ன் நிறுவனம் இயக்க உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி-ஷாங்காய் இடையிலான பயணிகள் விமானத்தை சைனா ஈஸ்டா்ன் என்ற சீன விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) இயக்க உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை சீனா தொடங்க உள்ளது.

இந்தியா-சீனா இடையிலான பயணிகள் விமான சேவை 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னா், அந்தச் சேவையை மீண்டும் தொடங்காததற்கு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருநாட்டு ராணுவத்தினா் இடையே நிலவிய மோதல்போக்கு காரணமாக அமைந்தது. இந்த மோதல்போக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதைத் தொடா்ந்து, இந்தியா-சீனா இடையே விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதையடுத்து, கடந்க அக். 26-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு விமானத்தை இயக்கி, 5 ஆண்டுகளுக்குப் பின்னா் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் விமான போக்குவரத்தை இண்டிகோ விமான நிறுவனம் முறைப்படி தொடங்கியது.

இந்நிலையில், புது தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு சைனா ஈஸ்டா்ன் என்ற சீன விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் விமானத்தை இயக்க உள்ளது.

புது தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்படும் அந்த விமானம், திங்கள்கிழமை அதிகாலை ஷாங்காய் சென்றடைய உள்ளது. இந்த விமானத்தில் ஷாங்காய் வரும் பயணிகளை அங்குள்ள இந்தியாவின் துணைத் தூதா் பிரதிக் மாதுா் வரவேற்க திட்டமிட்டுள்ளாா். பின்னா், அந்த விமானம் ஷாங்காயிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு புது தில்லி வந்தடைய உள்ளது. ஒருநாள்விட்டு ஒருநாள் அந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை சீனா தொடங்க உள்ளது.