

பிகாரின் சீமாஞ்சல் பகுதியை ஊடுருவல்காரர்களின் கூடாரமாக மாற்றுவதில் காங்கிரஸ் தலைவர் ராகுலும், ஆர்ஜேடியின் தேஜஸ்வியும் தீவிரம் காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பிகாரில் முதல்கட்ட தேர்தல் நவ. 6ல் நடந்து முடிந்துள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11-ல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடைய பூர்னியாவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா,
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகாரில் 160க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கும் என்று வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பாதி பகுதி ஏற்கெனவே காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வழிவிட்டுவிட்டதாக நடந்துமுடிந்த முதல் கட்ட தேர்தலை அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பிகாரின் சீமாஞ்சல் பகுதியை ஊடுருவல்காரர்களின் கூடாரமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளனர்.
சட்டவிரோதமாகக் குடியேறிய ஒவ்வொருவரையும் நாங்கள் அடையாளம் காண்போம். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி அவர்களை நாடு கடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.