

வாக்குத் திருட்டு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ``காங்கிரஸ் பழிபோடுவதற்கு எதுவுமில்லாததால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
பிகாரில் வாக்குகள் திருடப்படுவதாக அவர் நினைத்தால், அவர் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க வேண்டும். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை.
அவர் வெறுமனே அரசியலமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்.
பாதுகாப்புப் படையினரில் இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். அவர்களை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்கிறது. ஏழைகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.