

பொதுத்துறை வங்கி ஒன்றில் மேலாளர் அறையில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வங்கி மேலாளர் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது, அவரை திசை திருப்பும் வகையில் பின்புறம் இருந்தவாறு ஹிந்தி பாடலுக்கு இளம்பெண் ஒருவர் நடனமாடுவதால் பலரும் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதிக்குட்பட்ட பொதுத் துறையைச் சேர்ந்த அரசு வங்கியில் மேலாளர் அறையில் இளம்பெண் ஒருவர் ஹிந்தி பாடலுக்கு நடனமாடுகிறார். அப்போது மேலாளர் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார். திசைதிருப்பும் வகையில் அவரை பின்புறம் இருந்தவாறு கட்டியணைத்து நடன அசைவுகளைக் கொடுக்கிறார். ஆனால், அவர் தொடர்ந்து கோப்புகளைப் புரட்டி பணிபுரிவதைப்போல விடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வியோவை பகிர்ந்துள்ள வங்கி ஊழியர் ஒருவர், அனைத்துமே சமூக வலைதளங்களுக்கான பதிவுகள் அல்ல என்றும், இது வங்கித் துறை பணியை அவமதிப்பதைப்போன்றும் கேலி செய்வதைப்போன்றும் உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
வங்கியின் புதிய முகமாக இந்த விடியோ இருக்குமானால், இது வெட்கித் தலைகுனிய வேண்டியது என்றும், பணியிட ஒழுக்கமும் பொதுமக்களின் நன்மதிப்பும் மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை நாளிலும் மேலாளர் வங்கிக்கு வந்து பணி செய்துகொண்டிருப்பதால், மதிய உணவு கொடுக்க வந்த அவரின் மனைவி எடுத்துள்ள விடியோ இது எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | 15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.