

பிகாரில் ஜென் ஸி தலைமுறையினரிடையே ராகுல் காந்தி ஆதிக்கம் செலுத்துகிறாரா? என்பது குறித்து ஜன்சுராஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் பதில் அளித்துள்ளார்.
இளம் தலைமுறையினரை ராகுல் காந்தி வழிநடத்துகிறாரா? இல்லையா? என்பது குறித்து பகிர்ந்த அவர், பிகார் மக்களின் அரசியல் நம்பிக்கை குறித்தும் பேசினார்..
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
''ராகுல் காந்திக்கு பிகார் பற்றிய அறிவும், தெளிவும் எந்த அளவுக்கு இருக்கும்? ராகுல் காந்தி இங்கு வருகிறார். சில பயணங்கள் மேற்கொள்கிறார்; இரண்டு மூன்று ரோடு ஷோக்களை நடத்திவிட்டுச் செல்கிறார்.
பிகார் மக்கள் ராகுல் காந்தி சொல்வதைக் கேட்பதில்லை என்றாலும், ஜென் ஸி தலைமுறையினர் நம்பிக்கை கொள்வது ஏன்? பிகாரில் ஜென் ஸி தலைமுறை என்பது ஒரே வகையானக் குழு அல்ல. அவர்கள் மற்றவர்களின் அழைப்பின் பெயரிலும் மதிப்பீடுகளின்படியும் செயல்படுகின்றனர். வங்கதேசத்தின் ஜென் ஸி தலைமுறையினரின் போராட்டம் வியப்பளித்தது. நாட்டின் தலைமை பொறுப்பையே அது ஆட்டம் காண வைத்தது. ஆனால், பிகாரில் இது சாத்தியமல்ல.
தீவிர அரசியல் பரவிய மாநிலமாக பிகார் உள்ளது. இது பெங்களூருவைப் போன்று அல்ல. இங்கு மக்களுக்கு உடைகள், உணவு, வேலை என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. ஆனால், மக்களிடையே அரசியல் நம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவு? தங்கள் வேலையை விட்டுவிட்டு மக்கள் இரவு பகலாக அரசியல் கட்சிகளுக்கு வேலை பார்க்கின்றனர். ஆனால், யாரோ ஒருவரின் அழைப்பால் புரட்சி நடக்கும் என நாம் நம்பவில்லை.
பிகார் தேர்தல் அரசியலில் இளம் தலைமுறையினர் மிகவும் முக்கிய காரணியாக உள்ளனர். பிகாரில் 20 - 30 வயதுடைய இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பிகாரை விட்டு வெளியேற அவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நீங்கள் அவர்களை ஜென் ஸி என்றோ, இளம் தலைமுறை என்றோ அழைக்கலாம். இது வெறும் சொல் மட்டுமே.
காங்கிரஸ் பிகாரில் அரசியலில் ஒரு முக்கிய பங்காக பார்க்கப்படவில்லை. காங்கிரஸ் பற்றிய விவாதமே இங்கு இல்லை. பிகார் அரசியலில் காங்கிரஸின் பங்கு சிறியது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வங்கியில் ரீல்ஸ்! பணியின்போது மேலாளர் அறையில் நடனமாடும் இளம்பெண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.