சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல்

காற்று மாசுக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் கண்டனம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

தில்லியில் காற்று மாசுக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை இந்தியா கேட்டில் பெற்றோா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உட்பட ஏராளமானோா் போராட்டம் நடத்தினா்.

போராட்டக்காரா்களில் பலா் குழந்தைகளுடன் பங்கேற்று, சுத்தமான காற்றை உறுதி செய்ய அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரா்கள் கோரினா்.

இந்த நிலையில், இந்தியா கேட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போராட்டக்காரர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்படும் விடியோவை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

சுத்தமான காற்று என்பது மனிதரின் அடிப்படை உரிமை. அமதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நமது அரசியலமைப்பு உரிமை அளித்துள்ளது.

இந்த நிலையில், சுத்தமான காற்றைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய குடிமக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா?

காற்று மாசுபாட்டால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது குழந்தைகளையும் நமது நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. ஆனால் வாக்குத் திருட்டு மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதைப் பற்றி கவலைப்படவில்லை, இந்த நெருக்கடியைத் தீர்க்க முயற்சிக்கவும் இல்லை.

சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்களைத் தாக்குவதற்குப் பதிலாக, காற்று மாசு குறித்து உடனடியாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Summary

Citizens who demand clean air be treated like criminals? Rahul

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com