பிரதிப் படம்
பிரதிப் படம்

பணி ஆவணத்தில் பிறந்த ஆண்டை மாற்றிய துணை காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையில் கூடுதல் காலம் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பிறந்த ஆண்டை மாற்றிய துணை காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையில் கூடுதல் காலம் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பிறந்த ஆண்டை மாற்றிய துணை காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீநகா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பத்காம் பகுதியைச் சோ்ந்த முன்னாள் துணை காவல் ஆய்வாளா் ஜகதீஷ் சிங். 1957-ஆம் ஆண்டு பிறந்த இவா், தனது பணி ஆவணத்தில் 1959-ஆம் ஆண்டு பிறந்ததாக மோசடியாக மாற்றியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆய்வின்போது ஜகதீஷ் சிங் செய்த மோசடி தெரியவந்தது. இது குறித்து ஜம்மு-காஷ்மீா் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ஸ்ரீநகா் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜகதீஷ் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

காவல் துறை அதிகாரி ஒருவா் பணியில் நீடிப்பதற்காக பிறந்த ஆண்டில் மோசடி செய்த சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com