

பிகாரில் பேரவைத் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கான முதல்கட்டமாக 18 மாவட்டங்கள் அடங்கிய 121 தொகுதிகளில் நவ.6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன.8,491 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1.75 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 3.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இவர்களில் 50 சதவிகிதத்துக்கும் ( கிட்டத்தட்ட 2.28 கோடி) மேற்பட்ட வாக்காளர்கள் 30 - 60 வயது பிரிவினராவர். 7.69 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே 18-19 வயதுடையவர்களாக உள்ளனர்.
இந்தத் தேர்தலில் முன்னாள் துணை முதல்வர்கள் ரேணு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத், காங்கிரஸ் தலைவர் அஜீத் சர்மா உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தில்லியில் நேற்றிரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து பிகாரில் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.