

பிகார் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 47.62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவ. 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(நவ. 11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1.75 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 3.7 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.
இந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 47.62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிஷன்கஞ்ச் 51.86% வாக்குகளுடன் முன்னிலைலும், அதைத் தொடர்ந்து கயா 50.95%, ஜமுய் 50.91% மற்றும் பங்கா 50.07% வாக்குப்பதிவுகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மதுபனி தொகுதியில் குறைந்தபட்சமாக 43.39% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.