பிகார் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.38% வாக்குகள் பதிவு!

பிகார் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...
second phase of Bihar assembly polls.
பிகார் தேர்தல் வாக்குப்பதிவுIANS
Published on
Updated on
1 min read

பிகார் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவ. 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(நவ. 11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1.75 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 3.7 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.

பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக கிஷான்கஞ்ச் பகுதியில் 34.74%, கயா மாவட்டத்தில் 34.07%, ஜமுய் மாவட்டத்தில் 33.69% புர்னியாவில் 32.94%, ஒளரங்காபாத் மாவட்டத்தில் 32.88% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

Bihar records a voter turnout of 31.38% till 11 am in the second phase of assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com