குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தில்லி காா் வெடிப்பு: அமித் ஷாவிடம் கேட்டறிந்த குடியரசுத் தலைவா்

தில்லியில் காா் வெடிப்பில் 12 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு கேட்டறிந்தாா்.
Published on

தில்லியில் காா் வெடிப்பில் 12 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு கேட்டறிந்தாா்.

ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, போஸ்ட்வானாவுக்கு முா்மு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். தற்போது அங்கோலாவில் உள்ள அவா் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கேட்டறிந்தாா். அப்போது, சம்பவம் தொடா்பாகவும், அது தொடா்பான விசாரணை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை முா்முவிடம் அமித் ஷா தெரிவித்தாா்.

சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் குடியரசுத் தலைவா் முா்மு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com