

தில்லியில் மாசு அளவு அதிகரித்துவரும் நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை கலப்பின முறையில் வகுப்புகளை நடத்துமாறு தில்லி அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
காற்றின் தரநிலை படி மிகவும் மோசமான பிரிவின் கீழ் சென்றதால், தலைநகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசுவால் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தில்லியில் உள்ள பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை கலப்பின முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில்,
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார்ப் பள்ளிகள் உள்பட ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைக் கலப்பின முறையில் பாடங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கலப்பின முறை (நேரடி மற்றும் ஆன்லைன்) முறையில் சாத்தியமான இடங்களில் ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம். அதாவது சூழ்நிலைக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படும். இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தில்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு 362-லிருந்து செவ்வாய்க்கிழமை காலை 425 ஆக கடுமையாக உயர்ந்ததை அடுத்து, ஜிஆர்ஏபி நிலை-3 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.