ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது, புத்தாண்டு வாழ்த்துகளோடுதான் உலகம் முழுவதும் மக்கள் நம்பிக்கையோடு ஆண்டை வரவேற்கிறார்கள். ஆனால், அனைவரும் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நிகழ்வுகளோடு நிறைவு பெறுவதில்லை.
அந்த வகையில், வரும் 2026ஆம் ஆண்டு எப்படியிருக்கும்? என்று மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் நிலையில், இது பற்றி பாபா வங்கா சில தகவல்களை முன்கணித்து வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை முன்கணித்து, அவற்றில் பல அப்படியே நடந்தும் இருப்பதால், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண்ணின் கணிப்புகள் மீது பெரிய அளவில் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
சிறு வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்காவுக்கு, உலகில் நடக்கும் பல விஷயங்களை முன் கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. அவற்றை அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த நிலையில், கடந்த 1996ஆம் ஆண்டே பாபா வங்கா மரணம் அடைந்துவிட்ட போதும், அவரது கணிப்புகள் சாகா வரம் பெற்றிருக்கின்றன.
2025ஆம் ஆண்டு நிறைவுபெற ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், 2026 பற்றி பாபா வங்காவின் கணிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அதாவது, 2026ஆம் ஆண்டில் உலகின் கிழக்குப் பகுதியில் மிகப்பெரிய போர்கள் நடக்கும், அது மேற்கத்திய நாடுகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கும், ரஷியாவிலிருந்து ஒரு மிகப்பெரிய தலைவர் உருவாகி, உலகின் முக்கிய அதிபராக இருப்பார் என்று பாபா வங்கா கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், உலகப் போர் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். பணவீக்கம் மற்றும் தங்கம் விலை உச்சம் தொடலாம். வழக்கம் போல, 2026ஆம் ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும், வெள்ளம், வெப்ப அலை, நிலநடுக்கங்கள் நேரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு, செய்யறிவு பலம் பெறும். வேலை வாய்ப்புகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். செய்யறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மக்களால் முடியாத நிலை ஏற்படும். அது பல சவால்களை உருவாக்கும்.
வேற்றுகிரக வாசிகள் பூமிக்குள் நுழைவார்கள், அவர்கள் ஏலியன்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும் நடக்க வாய்ப்பிருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.