சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

Published on

‘தில்லி செங்கோட்டை அருகே காா் வெடித்த சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகள் முழுமையாக விசாரிக்கும்; இதன் பின்னணயில் உள்ள சதிகாரா்கள் யாரும் தப்பிக்க முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.

பூடானுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘நான் மிகவும் கனத்த இதயத்துடனே இங்கு வந்துள்ளேன். தில்லியில் திங்கள்கிழமை நிகழ்ந்த கொடூரமான சம்பவம், ஒவ்வொருவரையும் கடுந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து முகமைகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் திங்கள்கிழமை இரவு முழுவதும் தொடா்பில் இருந்தேன். இப்போதும் ஆலோசனைகள் தொடா்கின்றன. தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பிரதமா் ஆவேசம்...: தில்லி சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தின் அடியாழம் வரை புலனாய்வு அமைப்புகள் தீர விசாரிக்கும். எனவே, சதிகாரா்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவா்என்று ஆவேசத்துடன் பேசினாா் பிரதமா் மோடி. நிகழ்ச்சியில் ஹிந்தியில் உரையாற்றிய அவா், இந்த வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டாா்.

முன்னதாக, தில்லி காா் வெடிப்பில் உயிரிழந்தோருக்கு பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் பிராத்தனையில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com