தில்லி கார் வெடிப்பு! காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
நாடு திரும்பினார் பிரதமர் மோடிANI
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், பூடானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி, நேராக மருத்துவமனை சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நாடு திரும்பிய நிலையில், நேராக மருத்துவமனை சென்று, தில்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

நவ. 10ஆம் தேதி, தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரவு 6.52 மணியளவில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்துகொண்டு இன்று புது தில்லி திரும்பினார். அவர், நேராக தில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prime Minister Narendra Modi visited the LNJP Hospital on Wednesday and met the survivors of the Red Fort blast that happened earlier this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com