வெளியானது ஃபரீதாபாத் பெண் மருத்துவர் ஷாஹீன் பின்னணி!

ஃபரிதாபாத் பெண் மருத்துவர் ஷாஹீன் குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்கள்.
ஃபரீதாபாத்
ஃபரீதாபாத்ani
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட ஃபரிதாபாத் பெண் மருத்துவர் ஷாஹீன் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதான ஷாஹீன் சயீத், பற்றி அவரது சகோதரர் மற்றும் முன்னாள் கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை நம்புவதற்கில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

அவர் மிகவும் அன்பானவர், அவருக்குப் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருந்திருக்கும் என்று இதுவரை எந்த சந்தேகமும் எழுந்ததில்லை என்றும் கூறுகிறார்கள்.

தில்லி காவல்துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் படையினர், தங்களது வீட்டை சோதனை செய்ததை உறுதி செய்திருக்கும் குடும்பத்தினர், தங்களை மரியாதையாக நடத்தியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகளைத்தான் அவர்கள் எழுப்பியதாகவும், என்னையோ, எங்கள் வீட்டில் உள்ளவர்களையோ கடுமையாக நடத்தவில்லை. எங்களை பேச வைக்க எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அதே வேளையில், எங்கள் சகோதரி பற்றியும், அவர் ஏன் குடும்பத்தினரைப் பார்க்க வருவதில்லை என்பது பற்றியும் கேள்விகளை எழுப்பினார்கள் என்று கூறியிருக்கிறார் அவரது சகோதரர்.

எங்கள் சகோதரி ஷஹீனுடன் குடும்பத்தினர் யாரும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை என்றும், எப்போதாவது எனது பெற்றோர், அவரை போனில் தொடர்புகொண்டு நலமுடன் இருக்கிறாரா என்பதை கேட்டறிவார்கள் அவ்வளவுதான் என்கிறார்.

நீங்கள் அவரைச் சென்று பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் எங்கு வசிக்கிறார் என்பது மட்டும்தான் தெரியும், அங்குச் சென்றதில்லை என்றும், அவர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அவரது சகோதரர்.

Information released by the family of Faridabad female doctor Shaheen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com