தில்லி கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தில்லி கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர் பலியானது பற்றி...
லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனை
லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனைANI
Published on
Updated on
1 min read

தில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காரின் வெடிகுண்டு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த பிலால் என்பவர், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த செய்தியை உறுதி செய்துள்ள தில்லி காவல்துறையினர், விரைவில் பிலாலின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் என்று மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.

காரை ஓட்டி தற்கொலைத் தாக்குதல் நடத்தியது மருத்துவர் உமர்தான் என்பது, அவரின் தாயின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Summary

Delhi car blast: Death toll rises to 13!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com