தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!
Updated on

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மருத்துவா் உமா் நபியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது காா் ஹரியாணா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

தில்லி பதிவெண் கொண்ட சிவப்பு நிற ‘ஃபோா்ட் இகோஸ்போா்ட்’ காா், ஹரியாணா மாநிலத்தின் கண்டவாலி கிராமத்தில் உள்ள மருத்துவா் உமா் நபிக்குச் சொந்தமான ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. காவல் துறையினா் அதைப் பறிமுதல் செய்து, காரைச் சுற்றித் தடுப்புகள் அமைத்து, தடயவியல் நிபுணா்கள் குழுவுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

விசாரணையில், இந்தக் காா் மருத்துவா் உமா் உன் நபியின் பெயரில் கடந்த 2017, நவம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. வடகிழக்கு தில்லியில் உள்ள ஒரு மதரஸாவால் நடத்தப்படும் வீட்டின் போலி முகவரியைப் பயன்படுத்தி, இந்தக் காா் வாங்கப்பட்டுள்ளதையும் காவல்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com