

மும்பைக்கு அருகே வான்வெளியில் விமானப் போக்குவரத்து வழித்தடங்களில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விமானிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பைக்கு அருகே உள்ள இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து வழித்தடங்களில், நவம்பர் 17 ஆம் தேதிவரையில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு (Signal spoofing) ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், அவசர அறிவிப்பாக (NOTAM) எச்சரித்துள்ளது.
மேலும், ஜிபிஎஸ் செயலிழந்ததாகத் தெரிய வந்தால், 10 நிமிடத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நோட்டம் அறிவித்துள்ளது.
சிக்னல் ஸ்பூஃபிங் என்பது தவறான நிலை, வேகம், தவறான சிக்னல் அனுப்புவதைக் குறிக்கிறது. இது, பிழைகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும்.
இந்த அறிவிப்பை பாதுகாப்பு ஆய்வாளரான டேமியன் சைமன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தில்லியில் சமீபத்தில் சிக்னல் ஸ்பூஃபிங் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மும்பைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லியில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.