

கேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் சபரிமலைக்கு மாலை போட்டி கறுப்பு நிற உடையணிந்து வந்த மாணவருக்கு மறுப்புத் தெரிவித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு கேரளம் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் பலர், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செல்வதுண்டு.
கேரளத்தில் 41 நாள் விரதமாக மலையாள மாதமான விருச்சிகத்தில் (நவம்பர் மாதத்தில்) தொடங்கி சபரிமலையில் மண்டல பூஜை நாள் (டிசம்பர் மாதம்) வரை தொடர்கிறது.
இதில், பலரும் மாலை அணிந்து விரதமிருந்து கறுப்பு உடையணிந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் கடைபிடித்து வந்திருக்கிறார்.
அந்த மாணவர் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் விரதம் கடைபிடிக்க பயன்படுத்தும் கறுப்பு நிற உடையணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவருக்கு பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த நவ.3 ஆம் தேதி நடந்ததாகவும் கூறினார். அதன் பிறகு அந்த மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கேரளத்தில் உள்ள வலதுசாரி குழுக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.