

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ், செய்தியாளர்களுடன் பேசுகையில் கடந்த 17 மாதங்களில் தரவு, உற்பத்தி, சேவை என பல்வேறு துறைகளில் 120 பில்லியன் டாலர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்துக்கான மகிழ்ச்சியான தருணமிது.
ஆந்திர பிரதேசத்தை மற்றைய மாநிலங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் திட்ட முதலீடுகளை ஈர்த்தல், அவற்றைக் கொண்டு வருதல், செயல்படுத்துவதுதான்.
இப்போது எங்களின் ஒரே நோக்கம் என்பது பல்வேறு துறைகளில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தலைமையின்கீழ் 20 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!
Our single agenda is to create two million jobs across the various sectors says Andhra IT Minister Nara Lokesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.