அலிநகரை சீதைநகராக்குவேன்! பிகாரின் இளம் எம்எல்ஏவாக இருக்கும் பாடகி!

அலிநகரை சீதைநகராக மாற்றுவேன் என்று பாஜக வேட்பாளர் தெரிவித்திருப்பது பற்றி...
பிரதமர் மோடியுடன் மைதிலி (கோப்புப்படம்)
பிரதமர் மோடியுடன் மைதிலி (கோப்புப்படம்)ANI
Published on
Updated on
1 min read

அலிநகர் பெயரை சீதைநகர் என மாற்றுவேன் என்று அந்த தொகுதியின் பாஜக வேட்பாளரும் பாடகியுமான மைதிலி தாகூர் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 199 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட 25 வயது பாடகி மைதிலி தாக்குர், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னிலை பெற்று வருகிறார்.

13வது சுற்று முடிவில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளரைவிட 9450 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் மைதிலி தாகூர்.

இவர் வெற்றிபெறும் பட்சத்தில் பிகாரின் மிக இளம்வயது சட்டப்பேரவை உறுப்பினர் என்ற சாதனையைப் படைப்பார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய மைதிலி, “இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, பிகார் மக்களுடைய வெற்றி. பெண்களுக்கு நிதீஷ் செய்த நலத்திட்டங்கள் எனது பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பிகார் மக்கள் மோடியை நேசிக்கிறார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகிறார்கள். அலிநகர் கண்டிப்பாக சீதைநகராக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Alinagar will become Sitanagar for sure: BJP candidate Maithili Thakur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com