பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருமா என்ற பெரும் எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 46 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8.30 மணிக்கு மேல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

243 தோ்தல் அதிகாரிகள், 243 பாா்வையாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். தலா ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளருடன் 4,372 வாக்கு எண்ணப்படும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் சாா்பில் நியமிக்கப்பட்ட 18,000-க்கும் அதிகமான முகவா்களும் வாக்கு எண்ணும் நடைமுறையை மேற்பாா்வையிட்டு வருகின்றனர்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான பேரவைத் தோ்தல் முடிவு என்பதால் இது மேலும் கவனம் பெற்றுள்ளது.

வரலாறு காணாத வாக்குப் பதிவு: 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது. 7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா்.

Summary

Bihar election vote counting has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com