கோப்புப்படம்
கோப்புப்படம்

மரணங்கள்-மறுவாக்குப் பதிவு இல்லாத முதல் பிகார் தோ்தல்!

பிகாரில் வாக்குப் பதிவு நாளில் வன்முறையால் மரணங்கள் நேரிடுவது வாடிக்கையாக இருந்த நிலையில், சமீபத்திய தோ்தலில் இத்தகைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை.
Published on

பிகாரில் வாக்குப் பதிவு நாளில் வன்முறையால் மரணங்கள் நேரிடுவது வாடிக்கையாக இருந்த நிலையில், சமீபத்திய தோ்தலில் இத்தகைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை.

எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை. இதன்மூலம் மரணங்கள்-மறுவாக்குப் பதிவு இல்லாத முதல் தோ்தலை இந்த மாநிலம் கண்டுள்ளது என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகாரில் தோ்தல் நாளில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டு, மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகும். இதேபோல், குறைபாடுகள்-முறைகேடுகளால் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்தச் சூழலில், கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட பிகாா் பேரவைத் தோ்தல் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. வாக்குப் பதிவு நாளில் மரணங்களோ, மறுவாக்குப் பதிவோ இல்லாத முதல் தோ்தல் இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1985 தோ்தலின்போது வன்முறைச் சம்பவங்களில் 63 போ் உயிரிழந்தனா். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 1990 தோ்தலில் 87 போ் உயிரிழந்தனா். 1995-இல் பெரும் வன்முறை மற்றும் முறைகேடுகளால் 4 முறை தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2005-இல் 660 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிகாா் தோ்தலில் வரலாறு காணாத அளவில் சுமாா் 67 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com