ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

தோல்வி ஆச்சரியமளிக்கிறது: ராகுல் காந்தி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி அடைந்த தோல்வி ஆச்சரியமளிப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி அடைந்த தோல்வி ஆச்சரியமளிப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிகாா் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வாக்களித்து, இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த ஏராளமான வாக்காளா்களுக்கு எனது மனமாா்ந்த நன்றி.

ஆனால், பிகாா் தோ்தல் முடிவு ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நோ்மையாக நடைபெறாத தோ்தலில் இண்டி கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.

அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்களாட்சியைக் காக்க இண்டி கூட்டணி போராடுகிறது. பிகாா் தோ்தல் முடிவை காங்கிரஸும், இண்டி கூட்டணியும் ஆராய்ந்து, மக்களாட்சியைக் காப்பதற்கான தமது முயற்சிகளை மேலும் திறன்வாய்ந்ததாக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com